Categories
Tech டெக்னாலஜி

இனிமேல் பணம் அனுப்புறது ஈஸிதான்…. புதுசா வரப்போகும் சேவை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் யூபிஐ பண பரிவர்த்தனை சேவையை உபயோகப்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.இத்துறையில் பேடிஎம், போன்பே, கூகுள் பே, அமேசான் பே என்று பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது டாடா குழுமமும் இத்துறையில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளது. இதில் டாடா குழுமத்தின் யூபிஐ செயலிக்கு “டாடா நியு” என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த சேவைக்காக டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் வணிக பிரிவான டாடா டிஜிட்டல், ஐசிஐசி வங்கியுடன் இணைந்து செயல்பட உள்ளது. டாடாவின் இந்த நியுசேவை, பிற யூபிஐ செயலிகளை விடவும் அதிவேகமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த டாடா நியு யூபிஐ செயலி அடுத்தமாதம் ஐபிஎல் தொடரின்போது அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு யூபிஐ செயலிகளும் கேஷ்பேக், கூப்பன்கள் ஆகிய சலுகைகளை வழங்குகிறது. இதே அடிப்படையில் டாடா நியு செயலியிலும் பல்வேறு வகையான சலுகைகள், கேஷ்பேக்குகள் வழங்கப்படவுள்ளது. இதனைத் தவிர டாடா டிஜிட்டலின் பிற செயலிகளான பிக்பாஸ்கெட், 1 எம்.ஜி, குரோமா, டாடா கிளிக், ஃபிளைட் புக்கிங் சேவை போன்றவற்றையும் இந்த நியு செயலியிலேயே பயன்படுத்த முடியும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |