Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷின் படத்தை வெளியிட சிலர் மறுத்தாங்க”… பேட்டியில் பகிர்ந்த கஸ்தூரிராஜா…!!!

தனுஷ் பட்ட கஷ்டங்கள் பற்றி பேட்டி ஒன்றில் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா பேட்டி ஒன்றில் தனுஷ் பற்றி கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தை வாங்குவதற்கு சிலர் மறுத்தனர். பிறகு விநியோகஸ்தர் ஒருவர் அவரின் மகனுடன் படத்தை பார்த்தார்.

அவரின் மகன் படத்தை வாங்க வேண்டும் என்று கூறிய போதிலும் விநியோகஸ்தர் படத்தை வாங்க மறுத்ததால் அங்கு வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், இறுதியில் அந்த விநியோகஸ்தரின் மகன் படத்தை வாங்கி வெளியிட்டார். இருப்பினும் ஒரு இடத்தில் மட்டும் அது வெளியாகவில்லை. பிரபல விநியோகஸ்தரின் மூலம் படத்தை அங்கு வெளியிட்டேன். பிறகு அந்த விநியோகஸ்தர் இரண்டு வருடங்களுக்கு பிறகு தனுஷின் படங்களை வாங்கி தாருங்கள் என்று கேட்டார்” என கூறியுள்ளார்.

Categories

Tech |