கணவன்-மனைவியை கத்தியை காட்டி மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு அரசின தெருவில் ராஜலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேனகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ், கலைமணி ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
அதன்பின் தினேஷ் மற்றும் கலைமணி ஆகியோர் மேகனா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கணவன்-மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக மேகனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தினேஷை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் கலைமணியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.