போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கடைகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து மணப்பாறை-குளித்தலை நெடுஞ்சாலை மற்றும் பாதிரிப்பட்டி பிரிவு சாலை வரை மெயின் ரோட்டில் கடை உரிமையாளர்கள் சிலர் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகளை அமைத்திருப்பதாக பல புகார் வந்தது.
இதனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் மூன்று நாட்களுக்கு முன்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். பின்னர் கடை உரிமையாளர்கள் தாங்களாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர்.