Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இரயில்வே நிலையத்திற்கு சென்ற நபர்கள்…. காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே மரக்காணம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே நிலையம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது.

இதேப்போன்று திண்டிவனம் பகுதியில் வசிக்கும் இளவரசன்‌ என்பவருடைய மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |