Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற தேரோட்டம்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற கோவிலில் தேரோட்டம்  நடைபெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற நாகேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் முக்கிய நாளான கடந்த 13 -ஆம் தேதி ஒளை சப்பரத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளிய  வீதி உலா நிகழ்ச்சியும், நேற்று திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. இதனையடுத்து இன்று தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை  தரிசனம் செய்துள்ளனர். மேலும் நாளை மகாமகம் குளத்தில் வைத்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Categories

Tech |