Categories
மாநில செய்திகள்

பிரபல இசையமைப்பாளரின் இசை கச்சேரி….போக்குவரத்தில் தீடீர் மாற்றம்…!!!

சென்னையில் இளையராஜாவின் இசை கச்சேரி நிகழ்ச்சி காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியானது சென்னை தீவுத்திடலில் இன்று (மார்ச் 18) மாலை 6 மணி முதல் 10:30 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சுமார் 15,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்தப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன்படி மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அண்ணா சாலைக்கு செல்பவர்கள் முத்துசாமி பாலம், மன்றோ சிலை வழியாகவும், காமராஜர் சாலையில் இருந்து கொடிமரம் சாலை வழியாக அண்ணா சாலை ஈவிஆர் சாலை செல்பவர்களை மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் காமராஜர் சாலையில் இருந்து அண்ணா சாலை மற்றும் ஈவிஆர் சாலை செல்பவர்கள் கவனத்திற்கு ,உழைப்பாளர் சிலை சந்திப்பில் இருந்து இடது பக்கமாக  திரும்பி வாலாஜா சாலை, அண்ணா சாலை, பல்லவன் சாலை வழியாக ஈவிஆர் சாலையை அடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையடுத்து ராஜாஜி சாலை, பாரிமுனையில் இருந்து காமராஜர் சாலையை நோக்கி செல்பவர்கள், ஆர்பிஐ சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டாம் எனவும்,  வடக்கு கோட்டை பக்க சாலை, முத்து சாமி சாலை, ஈவிஆர் சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம் என  தெரிவித்துள்ளார்கள்.

இதைத்தொடர்ந்து ஈவிஆர் சாலையில் இருந்து போர் நினைவுச்சின்னம் வழியாக காமராஜர் சாலையை நோக்கி செல்பவர்கள் கவத்திற்கு , முத்துசாமி சாலைக்கு செல்லாமல், எம்எம்சி பாயிண்டில் வலது புறம் திரும்பி,பின் பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம் என்று  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதைபோல் அண்ணாசாலையில் இருந்து முத்துசாமி பாலம் வழியாக இராஜாஜி சாலை செல்பவர்கள் பல்லவன் சாலை, ஈவிஆர் சாலை, முத்து சாமி சாலை வழியாக ராஜாஜி சாலையை அடைய  அறிவுறுத்தப்படுகின்றனர்.

எனவே இவ்வாறு அறிவித்துள்ள காவல்துறையின் உத்தரவுக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |