Categories
அரசியல் மாநில செய்திகள்

”பொய் பிரச்சாரம் செய்யுறாங்க” எதிர்க்கட்சிகள் மீது EPS பாய்ச்சல் …!!

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் காரட்டூர் மணி தலைமையில் கொங்கணாபுரம் பகுதியில் திமுக, அமமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி சுமார் 1500க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களை முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.

அவர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர், அதிமுக தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி நடத்திவருகிறது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பொய் பிரசாரங்களை செய்கின்றன. அதிமுகவில் வந்து சேர்ந்து இந்த அதிமுக கட்சியை பலப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Categories

Tech |