மரத்தடியில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி காலின் மீது கார் ஏறி இறங்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன பொன்னேரி பகுதியில் காசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காசி குன்னத்தூர்-பொன்னேரி சாலையில் உள்ள புளிய மரத்தடியில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சின்ன மூக்கணுர் பகுதியில் வசிக்கும் ஆசைத்தம்பி என்பவர் ஓட்டி வந்த கார் காசியின் இரண்டு கால்கள் மீது ஏறி இறங்கியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த காசியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக காசியின் மகன் பழனிசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.