Categories
மாநில செய்திகள்

பார்வையாளர்களைக் கவர வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்

காணும் பொங்கல் நாளில் பார்வையாளர்களைக் கவர பலவிதமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியில் பூங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறந்தவொரு வனஉயிரன இனப்பெருக்க மையமாகத் திகழ்கிறது. பூங்கா நிர்வாகம் நல்ல வழிமுறைகள் மற்றும் சத்தான உணவுகள் அளிப்பதனால் பூங்காவில் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

park

பூங்காவில் இந்திய காட்டுமாடு ராகுல் – ரீமா என்ற இணை சமீபத்தில் ஒரு பெண் குட்டியை ஈன்றது. தற்சமயம் உயிரியல் பூங்காவில் 24 காட்டு மாடுகள் உள்ளன. இவை அருகருகே உள்ள இரு இருப்பிடங்களில் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆசியாவின் பெரும் குளம்பினம் மற்றும் இந்திய கண்டத்தில் மட்டுமே காணப்படும் நீலமான் மிகச்சிறந்த முறையில் இங்கு இனப்பெருக்கம் செய்து வருகின்றன. நீலமான் இணை சமீபத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. தற்சமயம் பூங்காவில் 11 நீலமான்கள் உள்ளன.

park

பூங்காவில் இந்திய பழுப்புநிற ஓநாயும் சிறந்த முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன. கீர்த்தி – வசந்தன் இணை ஓநாய்கள் சமீபத்தில் நான்கு ஆண், மூன்று பெண் குட்டிகள் என ஏழு குட்டிகளை ஈன்றது. இந்த இணை இத்துடன் மூன்றாவது முறையாக குட்டிகளை வெற்றிகரமாக ஈன்றுள்ளது.

புதிதாக பிறந்துள்ள குட்டிகள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் நல்ல முறையில் பாரமரிக்கப்பட்டு வருகின்றன. காணும் பொங்கல் நாளில் பார்வையாளர்களை மகிழ்விக்க பல விதமான சிறப்பு ஏற்பாடுகளை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களுக்கு பிறந்த குட்டிகளை பெரிய LED திரையில் காட்சிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |