தீயணைப்பு துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 6 அடி நீளமுள்ள அந்த பாம்பை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து வனத்துறையினர் அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.