கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் இருக்கும் யூனியன் அலுவலகம் முன்பு முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 9-ஆம் தேதி கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சுமார் 120 கிலோ எடையுள்ள பித்தளை பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் அதே கோவிலில் முருகன் மற்றும் தெய்வானை வெண்கல சிலைகள் திருடு போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.