Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல்…. மத்திய அரசு வெளியிட்ட புதிய அப்டேட்…!!!!

வருமான வரித்துறையின் புதிய இணைய தளத்தில் 6.63 கோடிக்கு மேற்பட்ட ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வருமானவரித் துறையின் புதிய இணையதளம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் இந்த இணையதளத்தில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தது. பின் வரி செலுத்துவோர் அளித்த புகாரைத் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது. இந்நிலையில் புதிய வருமான வரி இணையதளத்தில் இதுவரை 6.63 கோடி வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

மார்ச் 15ஆம் தேதி நிலவரப்படி புதிய இணையதளத்தில் 6.63 கோடி வருமான வரி தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதுபோக 99.27 நிலை  படிவங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 15-ஆம் தேதி ஆகும்.

இந்நிலையில் கடைசி நாளில்5.43 லட்சம் வருமானவரி ரிட்டர்ன்களும்  கடைசி நாளுக்கு முந்தைய ஐந்து நாட்களில்13,84 லட்சம்  வருமானவரித் ரிட்டர்ன்களும்  தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 2021- 22 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு6.63 கோடி வருமான வரி திட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒட்டுமொத்த வருமானவரி திட்டங்களில் 43 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் ஆன்லைனில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

Categories

Tech |