உணவு உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றும் வகையிலான ரோபோ ஜப்பானில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் கொரோனா தொற்றினை தொடர்ந்து உணவு உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்கு ஊழியர்கள் தயங்கி வருகின்றனர். இதனால் அங்கு ஊழியர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு உணவு உற்பத்தி தொழிற்சாலைகளில் ஏற்பட்ட பணியாளர்களின் தட்டுப்பாட்டை போக்குவதற்காக யமாட்டோ ஸ்கேல் என்ற நிறுவனமானது புதிய ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளது.
இந்த ரோபோ நூடுல்ஸ், சிக்கன், காய்கறி என விதவிதமான உணவு பொருட்களை எல்லாம் மிக நேர்த்தியாக பேக் செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரோபோவிற்கு பூட்லி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் உயரம் 5 அடி ஆகும். இதையடுத்து இந்த நிறுவனம் அந்த ரோபோவை ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு விற்க திட்டமிட்டுள்ளது.