தமிழ்நாட்டில் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி அன்று கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் பங்குனி மாதம் நடைபெறுகின்ற குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 7ஆம் தேதி அன்று திருவிழாவானது பூச்சாட்டுதலுடன் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பினால் எந்த ஒரு திருவிழா நடைபெறாமல் இருந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துள்ள நிலையில், மீண்டும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
எனவே வருகின்ற மார்ச் 22ஆம் தேதியன்று சத்தியமங்கலம் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலின் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த விடுமுறையானது பொருந்தாது என்றும் அம்மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.