நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வாடிவாசல் திரைப் படத்தின் சூட்டிங் ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்த படத்தை வெளியிடலாம் என படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்களாம். வாடிவாசல் திரைப்படமானது ஜல்லிக்கட்டை கதைக்களமாகக் கொண்டு இருந்தாலும் இடையில் இந்தி திணிப்பு போராட்டம் போன்ற கருத்துக்களையும் உள்ளே கொண்டிருப்பதாக வெற்றிமாறன் கூறியிருந்தார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை கலைபுலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.