Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முறையான அறிவிப்பு வழங்க வேண்டும்…. அ.தி.மு.க கவுன்சிலர்கள் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் போராட்டம்….!!

அ.தி.மு.க கவுன்சிலர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இன்று 16 பணிகளுக்கு டெண்டர் விடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்களை நகராட்சி அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் சங்கீதா, விமலா, சத்யா, முருகன், பாபு, ஒப்பந்தாரர் அருண் கென்னெடி உள்ளிட்ட பலர் திடீரென நகராட்சி அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்‌.

இவர்கள் டெண்டர் விடப்படும் அதற்கான நகலை முன்கூட்டியே தர வேண்டும். அதன்பிறகு முறையான அறிவிப்பு இல்லாமல் டெண்டர் வைக்க கூடாது எனவும் உடனடியாக டெண்டரை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் டெண்டர் ஒத்திவைக்கப்படுவதாக நகராட்சி அலுவலர்கள் அறிவிப்பு பலகையில் ஒட்டினர். அதன்பிறகு கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |