Categories
தேசிய செய்திகள்

பள்ளி பாடத்திட்டத்தில் இது கட்டாயம்…. மாநில அரசின் அறிவிப்பு…. பெற்றோர்கள் ஷாக்…!!!!

6 முதல் +2 வரையிலான வகுப்புகளின் பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்படுவதாக கூறிய மாநில அரசின் அறிவிப்பு பொதுவெளியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திரபாய் படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், குஜராத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த வகையில் இந்திய கலாச்சாரம் மற்றும் அறிவியலை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

அந்த வகையில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத் திட்டங்களில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படும். மாணவர்களுக்கு பகவத் கீதையின் முக்கியத்துவம் பற்றி கூறப்படும். பின்னர், கதைகள், ஸ்லோகங்கள், பாடல்கள், கட்டுரைகள், விவாதங்கள், நாடகங்கள், வினாடி வினாக்கள் போன்ற வடிவங்களில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகவத்கீதை இந்துக்களின் வேத நூலாகும். இந்த அறிவிப்பு பிற மத மாணவர்கள், பெற்றோர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுவெளியில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. ‘உலகம் முழுக்க, குறிப்பிட்ட மதங்களை ஏற்றுக்கொண்ட நாடுகளில்கூட வகுப்பறையில் மத நூல்களை போதிப்பதில்லை. பல்வேறு சாதி, மத பிரிவினரும் பங்கேற்கும் வகுப்பறை என்பது சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதே பள்ளிக் கல்விக்கான அறம். பள்ளிகளில் அனைத்து மதத்தினரும் கல்வி கற்பதால் இதை பிற மதத்தினருக்கு கட்டாயமாக்க கூடாது’ என கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

Categories

Tech |