Categories
மாநில செய்திகள்

“DravidianBudget 2022” மற்றும் “TNBudget2022″…. இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் தமிழக பட்ஜெட்….!!!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.இதையடுத்து தமிழக பட்ஜெட் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்து வருகிறார். அவர் வெளியிட்டு வரும் அறிவிப்புகள் ட்விட்டர் தளத்தில் அதிகமாக பகிர படுவதால் “DravidianBudget 2022” மற்றும் “TNBudget2022” ஆகிய ஹேஷ்டேகுகள் இந்திய அளவிலான டிவிட்டர் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

Categories

Tech |