Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை: பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு….. மாணவர்களுக்கு குட் நியூஸ்….!!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.அதன்படி பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.36.895.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட்டில் இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சிகள் நடத்தப்படும். வனப்பகுதியில் வரை காடுகளை பாதுகாக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் பத்தாம் வகுப்பு வரை இலவச பாடப்புத்தகங்கள் வழங்க 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Categories

Tech |