Categories
மாநில செய்திகள்

வடசென்னையில் புதிய விளையாட்டு வளாகம்…. நிதியமைச்சர் அறிவிப்பு….!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.அதன்படி சென்னை ஆர் கே நகரில் புதிய விளையாட்டு வளாகம் 10 கோடி ரூபாயில் அமைக்கப்படும். செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்த அரசு ஆதரவு அளிக்கும். 150 நாடுகளைச் சேர்ந்த 2000 முன்னணி செஸ் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.293.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |