Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் வேணும்னா அப்படி செய்யட்டுமா ? அணிக்காக ஷிகார் எடுக்கும் முடிவு …!!

இந்திய ஒருநாள் அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாவது வீரராக களமிறங்குவதற்கு நான் தயாராகவே உள்ளேன் என தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகிய மூவரும் அபாரமான ஃபார்மில் உள்ளதால், யாரை தொடக்க வீரராக களமிறக்கலாம், யாரை மிடில் ஆர்டரில் களமிறக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த மூவருக்கும் அணியில் இடம்கொடுக்க வேண்டும் என்பதால் கடந்த போட்டியில் விராட் கோலி, ராகுலுக்காக நான்காவது வீரராக களமிறங்கினார். ஆனால் அதுவே இந்திய அணியின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தவான் பேசுகையில், ” இந்திய அணி நிர்வாகம் என்னை மூன்றாவது வீரராக களமிறங்க கேட்டால், நிச்சயம் நான் தயாராகவே இருப்பேன். அதற்கு மன உறுதி அதிகமாக வேண்டும். எங்கள் அணியினருக்கு அது அதிகம் உள்ளதால்தான், இந்திய அணிக்காக ஆடுகிறோம். சர்வதேச கிரிக்கெட்டில் இடம் மாறி ஆடுவது பெரிய விஷயமே அல்ல.

ராகுலை அணியில் சேர்ப்பது கேப்டனின் விருப்பம். ராகுல் கடந்தத் தொடரில் சிறப்பாக ஆடினார். நேற்றும் சிறப்பாக ஆடினார். அதேபோல் விராட் கோலியும் மூன்றாவது இடத்தில் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். என்னைப் பொறுத்தவரை மூன்றாவது இடத்தில் விராட் கோலியே களமிறங்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், யார் எந்த இடத்தில் ஆடுவார்கள் என ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |