திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி தீர்க்கமான நடவடிக்கை அரசின் வருவாய் பற்றாக்குறை 4.16 சதவீதத்திலிருந்து 3.O8 சதவீதமாக குறைவு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தலாக இருந்த நிலையில் தற்போது அது மாற்றப்பட்டு உள்ளது. இக்கட்டான சூழலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும் தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளோம் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வேளாண் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட தங்க நகை கடன் தள்ளுபடி ரூ .1000 கோடி ஒதுக்கீடு. மகளிர் சுய உதவி குழு கடன் ரூ.500 கோடி ஒதுக்கீடு. வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.