Categories
மாநில செய்திகள்

“மாதந்தோறும் ரூ.1000 முதல் ஸ்மார்ட் வகுப்பறை வரை”…. பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்…. இதோ முழு விவரம்….!!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை உரையாற்றினார். ஒரு மணி நேரம் 50 நிமிடம் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

‘இக்கட்டான சூழலில் ஆட்சி பொறுப்பேற்றாலும், தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளோம். கடந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற்றன. கொரோனா பெருந்தொற்றின் 2ஆவது மற்றும் 3ஆவது அலை மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டது கொரோனா காலத்தில் நிதிச்சுமை அதிகமாக இருந்தபோதும் நிதி நிர்வாகத்தால் திறம்பட சமாளித்தோம். தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தலாக இருந்த நிலையில், தற்போது அது மாற்றப்பட்டுள்ளது

தீர்க்கமான நடவடிக்கையால் அரசின் வருவாய் பற்றாக்குறை, 4.16%லிருந்து, 3.08%ஆக குறைய உள்ளது திராவிட இயக்கம் சமூகநீதிக்கான போராட்டத்தில் வெற்றி பெற்றாலும், அது இன்னும் முழுமையாக முடியவில்லை. வரும் நிதியாண்டு பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.7000 கோடி குறைகிறது உக்ரைன்-ரஷ்யா போரால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலும் பாதிப்பு ஏற்படக் கூடும். மாநில நிதிநிலை மேம்படும்போது மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் வழக்கம்போல் எந்த தடைகளும் இன்றி செயல்படுத்தப்படும். அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

“முதல்வரின் முகவரி” என்ற புதிய துறையின் மூலம் 10.01 லட்சம் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது

ஜிஎஸ்டி வரி நடைமுறை மூலம், தமிழ்நாடு அரசு ரூ.20,000 கோடி இழப்பினை எதிர்கொள்ள நேரிடும்.

தமிழ் மொழியின் தொன்மையையும், செம்மையையும் போற்றிட, பிற மொழிகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ் வேர் சொற்களை முன்னிலைப்படுத்தி, தமிழ் மொழி வளத்தின் புகழ்பரப்ப மொழி வல்லுநர்கள் குழு அமைக்கப்படும்

“அகரமுதலி” திட்டத்தின் கீழ் தமிழ் மொழியின் வேர்சொற்களை கண்டறியும் ஆய்வு பணி நடைபெறும் தாய்மொழி கல்வியே சிறந்த கல்விமுறை என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழ்வழிக்கல்வியை ஊக்குவிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் பள்ளிகளில், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 1 முதல் 10 வகுப்பு வரை இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.

அரசு பள்ளி மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு, மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.17,901 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை ஈசிஆர் சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும்.

ஸ்மார்ட் வகுப்பறை, கணினி ஆய்வகங்களுடன் ரூ.7,000 கோடியில் பள்ளிகள் நவீனப்படுத்தப்படும்.

விழுப்புரம், இராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.10 கோடியில் புதிதாக அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

அரசு நிலங்களை பராமரிக்க சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நவீன நுட்பத்தில் நிலங்களை அளவீடும் செய்யும் வகையில், ரோவர் எந்திரங்களை வாங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிக்கு ரூ.500 கோடியும், பேரிடர் மேலாண்மைத்துறை ரூ.7,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் தவறான பதிவுகளை தடுக்க, சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்.

காவல்துறைக்கு ரூ.10,285 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்களை வழங்க ரூ.19,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

வானிலையை நவீன நுட்பத்துடன் துல்லியமாக கணிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சுய உதவிக்குழுக்களுக்கும், விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.4130 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

நீர்வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, ரூ.3,384 கோடியும் சென்னை அருகே தாவரவியல் பூங்கா அமைக்க ரூ.300 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் ம்

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும்.
புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு நடமாடும் உதவி மையம் அமைக்கப்படும்.

கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1315 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.849.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் அமைக்க நடவடிக்கை கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் மாணவர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 5 லட்சம் மாணவர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சென்னையை போன்று புத்தக கண்காட்சி நடத்தப்படும்.

புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகங்கள் அமைக்கப்படும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு விரிவான ஏற்பாடுகள் சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 150 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் மகப்பேறு திட்டத்திற்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியுள்ள தமிழக மாணவர்களின் கல்விக்காக அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்.

தமிழகத்தில் புதிய வானிலை கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி புறக்கணிக்கப்பட்ட 149 ‘பெரியார் நினைவு’ சமத்துவபுரங்கள் ₹190 கோடி செலவில் சீரமைக்கப்படும்.

காஞ்சி புற்றுநோய் மருத்துவமனை மேம்படுத்தப்படும் காஞ்சிபுரத்தில் அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, உயர்தர மருத்துவமனையாக மேம்படுத்தப்படும்.

தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1949 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பேருந்துகள் நவீன மயமாக்கல், மின் பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 5375 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மின்சார வாரியத்துக்கு ஏற்படும் இழப்பை அரசே ஏற்கும்; இதற்காக ரூ.13,108 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,547 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பழங்குடியினருக்கு 1000 புதிய வீடுகள் விளிம்பு நிலையில் உள்ள பழங்குடியினருக்கு(ST), 1000 புதிய வீடுகள், ரூ.50 கோடியில் கட்டித்தரப்படும் உள்ளிட்ட அவர் உரையில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

Categories

Tech |