உணவுத்துறை அதிகாரிகள் கடைகளில் அதிரடியாக சோதனை செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியில் அமைத்துள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக உணவு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாஜலம், சுவாமிநாதன்,மேற்பார்வையாளர் அந்தோணி, கலைச்செல்வன், சாமி, சேகர் ஆகியோர் கொண்ட குழு மன்னார்குடி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள்,உணவகம், வணிக வளாகம் போன்றவற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுபோன்று கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.