Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கவரிங் நகைகளை அடகு வைத்து… “ரூ 1,50,000 மோசடி செய்த துணை நடிகை”.… போலீசார் விசாரணை…!!

கவரிங் நகைகளை அடகு வைத்து பணமோசடி செய்த துணை நடிகை மீது வந்த புகாரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தசரதபுரம் பகுதியில் உத்தம் சந்த் என்பவர் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் ரமேஷ் என்பவர் வந்துள்ளார். அவர் இரண்டு வளையல்கள், சங்கிலி உள்ளிட்டவைகள் அடகுவைத்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி சென்றுள்ளார்.

இதன்பின் அடகு கடை உரிமையாளர் அந்த நகைகளை வங்கியில் அடகுவைக்க கொண்டு சென்றார்.  அப்போது அந்த நகைகள் கவரிங் நகை என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அடகு கடை உரிமையாளர் ரமேஷை போனில் தொடர்பு கொண்டு கவரிங் நகைகளை கொடுத்து என்னை ஏமாற்றி விட்டீர்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று ரமேஷிடம் கேட்டுள்ளார்.

அதற்கு ரமேஷ் நான் சினிமாவில் துணை நடிகராக நடித்து வருகிறேன். என்னுடன் சினிமாவில் துணை நடிகராக நடித்து வரும் சலோமியா என்பவருக்கு சொந்தமான நகைகள் அடகு வைத்த பணத்தை அவரே பெற்றுச் சென்று விட்டார் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே ரமேஷ் சலோமியாக்கு போன் செய்து நடந்ததை தெரிவித்துள்ளார்.

அதற்கு சலோமியா பணத்தை கொடுத்து நகை வாங்கி கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் பணம் கொண்டு வரவில்லை. இதனை அடுத்து துணை நடிகர் ரமேஷ் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் துணை நடிகை சலோமியா மீது போலி நகைகளை கொடுத்து மோசடி செய்ததாக புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |