Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி… “தங்க செயின் பறிப்பு”… ஒருவர் அதிரடி கைது… 5 பேருக்கு வலைவீச்சு..!!

லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி தங்கச் சங்கிலியை பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள எம்ஜிஆர் நகரில் லாரி டிரைவரான விஷ்ணு(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் சுசீந்திரம் அருகிலுள்ள நல்லூர் பக்கத்தில் மறு கால் தலையில் உள்ள புலமாடன் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியில் நாகர்கோவில் ஒழுகினசேரி அவ்வைசண்முகம் சாலை பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்ற செல்வம்(27), அய்யாக்குட்டி, முருகன், விஜய், மாரியப்பன், லெட்சுமணன் ஆகிய ஆறு பேரும் சேர்ந்து விஷ்ணுவை வழிமறித்து அரிவாளால் வெட்டி அவரிடமிருந்த 1 1/2பவுன் தங்கச் சங்கிலி, செல்போன், கைக்கடிகாரம், பணம் எல்லாவற்றையும் பறித்து சென்று விட்டு தப்பி ஓடினார்கள்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த விஷ்ணுவை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இதுகுறித்து விஷ்ணு சுசீந்திரம் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாயிலட்சுமி சப் இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் ஆகியோர் 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கு சம்பந்தமாக   வினோத்குமார் என்ற செல்வத்தை கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை சுசீந்திரம் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்

Categories

Tech |