சீனாவில் ரெட்மி மேக்ஸ் 100 என்ற 100 இன்ச் ஸ்மார்ட் டிவியை ஜியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
* டிவி ஸ்கிரீன் அளவு – 2,540mm
* இந்த டிவியில் டால்பி அட்மோஸ், டிடிஎஸ்-ஹெச்டி ஆடியோ, டால்பி ஆடியோ ஆகியவற்றிருக்கான சப்போர்ட்டும் தரப்பட்டுள்ளது.
* இந்த டிவியில் கொடுக்கப்பட்டுள்ள எல்.சி.டி பேனல் – 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4கே ரெஷலியூஷன், DCI-P3 கலர் காமுட்டை பெற்றுள்ளது.
* இந்த டிவி குவாட் கோர் பிராசஸருடன் 64 ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேமை கொண்டுள்ளது.
* இந்த டிவியில் 15W ஸ்பீக்கர்கள், 2 ஹெச்.டி.எம்.ஐ 2.1 போர்ட்டுகள், வைஃபை 6 தரப்பட்டுள்ளன.
* MIUI மென்பொருளில் இந்த டிவி இயங்குகிறது.
* இந்திய மதிப்பில் இந்த ரெட்மி மேக்ஸ் 100 டிவியின் விலை ரூ.2,39,400-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் இந்த டிவி சீனாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த டிவி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.