செல்போன் டவர் உதிரிபாகங்களை விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதுச்சேரியில் திலீப்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் டவர் அமைக்கும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் பழனியப்பன் என்பவருடைய வீட்டின் மாடியில் கடந்த 2009-ம் ஆண்டு செல்போன் டவர் அமைத்துள்ளார். இந்த கோபுரத்திற்காக திலீப்குமார் வீட்டின் உரிமையாளருக்கு வாடகை பணம் செலுத்தியுள்ளார். ஆனால் கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து திலீப்குமார் வாடகை பணம் கொடுக்காமல் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பழனியப்பனின் மகன்கள் ராமசாமி, கந்தசாமி உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து செல்போன் டவர் உதிரி பாகங்களை வளர்ச்சியை விற்பனை செய்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு 26,76,352 ரூபாய் ஆகும். இதுகுறித்து திலீப்குமார் விழுப்புரம் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கந்தசாமி, ராமசாமி உள்ளிட்ட 6 நபர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.