தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பழைய மீன் சந்தை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட துணை செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் தேவனாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராமன், ஒன்றிய தலைவர் குணசேகரன், ஒன்றிய பொறுப்பாளர் சங்கர், சங்க உறுப்பினர் ஜீவபாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.