ஸ்கர்டு பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் ஸ்கர்டு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் திடீரென நிலநடுக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது தரைப்பகுதியில் இருந்து 14.11 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்த நிலநடுக்கம் வடமேற்கில் 67 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் அப்பகுதியிலுள்ள கட்டிடங்களும் வீடுகளும் குலுங்கியுள்ளன. இதனால் மக்கள் அச்சமடைந்து தங்கள் வீட்டிலிருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். மேலும் இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.