கும்பகோணத்தில் உள்ள சிவன் கோவில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களான நாகேஸ்வரன் கோவில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவில், கோட்டையூர் கோடீஸ்வரசாமி கோவில் ஆகிய கோவில்களில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 9-ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த விழாவின் முக்கிய நாட்களான கடந்த 13-ஆம் தேதி ஓலை சப்பரமும், 15-ஆம் தேதி திருக்கல்யாணமும் மூன்று கோவில்களிலும் நடைபெற்றது.
இந்நிலையில் நாகேஸ்வரன் கோவில், விஸ்வநாதர் கோவில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில் ஆகிய கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமிகளை தரிசனம் செய்துள்ளனர். இதனையடுத்து இன்று மகாமகம் குளத்தில் நாகேஸ்வரர் கோவில் மற்றும் ஆதிகம்பட்ட விஸ்வநாதர்சாமி கோவில்களின் சார்பில் பகல் 12 மணி முதல் மதியம் 1 மணி வரை தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றுள்ளது. அதேபோல் கொட்டையூர் கோடீஸ்வரர் சாமி கோவிலில் தீர்த்தவாரி வைபவம் காவிரி ஆற்றில் வைத்து நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை தரிசனம் செய்தனர்