மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து எஸ். எஸ். ஐ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில், பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது, தலைவர் சந்திரசேகர், கல்லூரி முதல்வர் ஹேமாமாலினி, தி.மு.க.வின் ஒன்றியச் செயலாளர் பூமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், துணை ஒன்றிய செயலாளர் சிவபுரி சேகர், அலுவலக தலைவர் சிவக்குமார், கழக பிரதிநிதி தருண் மெடிக்கல், புகழேந்தி, மருத்துவர் அருள்மணி நாகராஜன், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ரஞ்சன் துரை, கல்லூரி இயக்குனர் புகழேந்தி, சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து இந்த ஊர்வலம் நகரின் வணிக வளாகங்கள், பேருந்து நிலையம், திண்டுக்கல்- காரைக்குடி சாலை, பெரிய கடைவீதி சாலை, உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். மீண்டும் மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் போன்ற விழிப்புணர்வுகளை மாணவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.