Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்ட் ஆடியோ லான்ச் ரத்து”… காரணம் என்ன தெரியுமா..? வெளியான தகவல்…!!!

விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

தமிழ்சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் இருந்து அண்மையில் அரபி குத்து பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து இரண்டாவது சிங்குளுக்கான புரோமோ வெளியாகி இருக்கின்றது. பீஸ்ட் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் வரும் 20ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆடியோ லான்ச் வெளியீடில் உதயநிதியின் தலையீடு இருப்பதாக கூறப்படுகின்றது. சமீபத்தில் பிரசாந்த் கிஷோரை விஜய் நேரில் சந்தித்தார். தேர்தல் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் உதயநிதிக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் அதனால் சன் பிக்சருக்கு தொடர்பு கொண்டு நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கூறியுள்ளார். விஜய்க்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலினை கொண்டு வரும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றது இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வெளியாகி உள்ளன.

Categories

Tech |