சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, “தமிழக பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (18.03.2022) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும்.
19.03.2022 – திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், மதுரை, தர்மபுரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும்.
20.03.2022ஆம் தேதி முதல் 22.03.2022ஆம் தேதி வரை – புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 18.03.2022,19.03.2022 ஆகிய தேதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். வானம் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.