அஜித்தின் 62 திரைப்படத்தின் தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜீத் நடிப்பில் அண்மையில் வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது. வினோத் இயக்கிய இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் இது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இது கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் அளவில் ஹிட்டாகியுள்ளது.
இந்நிலையில் அஜீத் நடிக்கும் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்பு வெளியாகி இருந்த தகவலின்படி இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த வருட இறுதியில் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த வருடம் இடையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. விக்னேஷ் சிவன் படங்களுக்கு தொடர்ந்து நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருவதால் இந்த திரைப்படத்திலும் இவர்தான் ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.