ஐஸ்வர்யாவின் பயணி பாடலைப் பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ள தனுஷ்.
பிரபல இயக்குனரான ஐஸ்வர்யா இயக்கத்தில் 9 வருடங்களுக்குப் பிறகு பயணி பாடல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தெலுங்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடலை பகிர்ந்து வாழ்த்தியுள்ளார். இந்நிலையில் விவாகரத்துக்குப் பின் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளிவந்த இந்த பாடலை பதிவிட்டு தனுஷ் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
பலரையும் ஆச்சரியப்படுத்தி இந்தப் பதிவில் தனுஷ் ஐஸ்வர்யாவை தோழி என குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் இவர்கள் இணைந்து வாழ்வார்கள் என எண்ணினார். இந்நிலையில், தனுஷ் ஐஸ்வர்யாவை தோழி என்று சொல்லி விட்டாரே என கூறுவர் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் விவாகரத்திற்கு பின்னும் நண்பர்களாக இருக்கின்றார்களே என பாராட்டி வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.