காதணி விழாவிற்கு சென்ற வாலிபர் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பராயன்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கிருஷ்ணா தனது நண்பரான கரிகாலனுடன் உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பிறகு அவர்கள் இருவரும் திருச்சிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது பால் சொசைட்டி அருகில் சென்ற நிலையில் எதிரே வந்த சரக்கு வேன் எதிர்பாராவிதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணா, கரிகாலனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் படுகாயமடைந்த கரிகாலனுக்கு மருத்துவர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.