Categories
உலக செய்திகள்

“360 லட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த திமிங்கலத்தின் தலைப்பகுதி”…. அசத்திய பிரபல நாட்டு ஆராய்ச்சியாளர்….!!

360 லட்சம் வருடங்களுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த திமங்கலத்தின் மண்டைஓட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

பெரு நாட்டில் ஒஷிகஜி என்ற பாலைவனம் அமைந்துள்ளது. இந்த பாலைவனத்தில் ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே புதைப்படிம ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த பாலைவனமானது  பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கடலாக இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  இது குறித்து  ஆராய்ச்சியாளர்கள் அந்த பாலைவனத்தின் தென்மேற்கு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் ஆய்வு பணிகளை மேற்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு மண்ணில் புதைந்தப்படி ஒரு மண்டை ஓடு அவர்களுக்கு கிடைத்துள்ளது. அது எந்த விலங்கின் உடையது என்பது குறித்த ஆராய்ச்சியை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த மண்டை ஓடானது பலிலோசாரஸ் என்ற திமிங்கலத்தின்  உடையது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  மேலும்  இதுகுறித்து அவர்கள் கூறியதாவது “இந்த மண்டை ஓடு 360 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது. தற்போது பெரு நாடு அமைந்துள்ள பகுதி பலநூறு லட்சம் வருடங்களுக்கு முன் பெருங்கடலாக இருந்தது.  அந்த சமயத்தில் பெருங்கடலில் இந்த பலிலோசாரஸ் திமிங்கலம் வாழ்ந்திருக்கலாம். மேலும் இந்த திமிங்கலத்தின் மண்டை ஓட்டை பொது மக்கள் பார்வையிடுவதற்காக அருங்காட்சியத்தில் வைத்துள்ளோம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |