Bajaj Chetak புனேவில் விற்பனை செய்த பின்னர் தான் பெங்களூருவுக்கு விற்பனைக்கு வரும் என்று கூறி பஜாஜ் அதன் முழு விலை உள்ளிட்ட விவரங்களை அறிவித்துள்ளது.
பஜாஜ் வாகனத் தயாரிப்பு நிறுவனம் Bajaj Chetak என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஒரு லட்ச ரூபாய் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது.இதுதான் பஜாஜ் நிறுவனம் வெளியிடும் முதல் எலக்ட்ரிக் வாகனமாகும். இது இரண்டு வெர்சனில் வெளியிடப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ 1 லட்சம் என்று Chetak-ன் நகர்ப்புற வெர்ஷனுக்கும் , ரூ 1.15 லட்சம் என்று Chetak-ன் பிரீமியம் வெர்ஷனுக்கும் சந்தை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விற்பனை :
இந்த இரண்டு வகை மோட்டாரிலும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. இதன் விற்பனை நேற்று முதல் தொடங்கியுள்ளது. ரூ வெறும் 2,000 முன்பணமாக செலுத்தி இந்த மோட்டார் வாகனத்தை முன் பதிவு செய்து கொள்ளலாம்.
Bajaj Chetak முதலில் புனேவிலும் , அடுத்ததாக பெங்களூருவில் விற்பனையை தொடங்கிய பின்னர் தான் நாட்டின் மற்ற நகரங்களில் விற்பனையை தொடங்க இருக்கின்றது. வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் இதற்கான டெலிவரி ஆரம்பிக்கப்பட இருக்கிறது.
Chetak வெஸ்பாவிடமிருந்து சில முன்னுதாரணங்களைப் பெற்று கொண்டு ரெட்ரோ டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது . 120 கிலோ எடைகொண்ட Chetak மணிக்கு சுமார் 60 கிலோ மீட்டர் செல்லக் கூடியதாக வேகத்திறன் கொண்டது.
எல்ஈடி விலக்கு , டிஜிட்டல் கன்சோல், பேட்டரியின் நிலையை அனைத்து இடங்களிலும் அறியும் வசதியுடன் , இண்டிகேட்டர் மற்றும் சாவியில்லாமல் வண்டியை ஸ்டார்ட் செய்வதற்கான தொழில்நுட்ப வசதியுடன் வந்துள்ளது செடாக்.
மகாராஷ்டிராவின் புனேவில் செயல்படும் சகான் பஜாஜ் தொழிற்சாலையில் உற்பத்தியான இந்த புதிய செடாக் 50,000 கிலோ மீட்டர் , 3 ஆண்டுகள் வாரன்டியுடன் சந்தையில் களமிறங்கியுள்ளது.
இதிலுள்ள எலக்ட்ரிக் மோட்டார் 4 kW அதிகபட்ச பவரையும் , 3.8 kW தொடர் பவரையும் கொடுக்கும். இந்த வண்டியை ஈகோ மற்றும் ஸ்போர்ட் மோட்களில் இயக்க முடியும். இதனுடைய பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்து , ஈகோ மோடில் 95 கிலோ மீட்டர் தூரம் வரை பயணமும், ஸ்போர்ட் மோடில் 85 கிலோ மீட்டர் தூரம் வரை பயணமும் மேற்கொள்ள முடியும்.
இந்த பைக்கில் பொறுத்தப்பட்டுள்ள பேட்டரியானது 70,000 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடும் என்றும் , இது அனைத்து வித வானிலைகளிலும் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் பஜாஜ் உறுதியளித்துள்ளது. இதனுடைய பேட்டரியை ஒரு மணி நேரத்தில் 25 சதவிகிதமும், 5 மணி நேரத்தில் 100 சதவிகிதமும் சார்ஜ் செய்ய முடியும். Bajaj Chetak ஒரு சார்ஜில் 95 கிலோ மீட்டர் ஓடுமாம். செடாக் 12 இன்ச் சக்கரம், டிரெய்ல் லிங்க் சஸ்பன்ஷன் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.