ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தில் ரஷ்யா உடனான ஒத்துழைப்பை கைவிடுவதாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படைகளின் தாக்குதலானது இன்று 23வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரேன் மீது ரஷ்யா ஏற்படுத்துகின்ற தாக்குதலின் காரணமாக அமெரிக்கா, கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்த நிலையில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “செவ்வாய் கிரகத்திற்கான எக்ஸோமார்ஸ் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இதையடுத்து எக்ஸோமார்ஸ் என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஆகியவற்றின் விண்வெளி திட்டமாக உள்ளது. மேலும் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதே இதன் குறிக்கோளாக உள்ளது. மேலும் இத்திட்டத்தின் முதல் பகுதியானது கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.
ரஷ்யா இந்த விண்கலனை கொண்டு செல்வதற்காக ராக்கெட்டை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா-உக்ரேன் மீது தொடுத்துள்ள போரின் காரணமாக இந்தத் திட்டத்திலிருந்து ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தற்காலிகமாக, ரஷ்யாவுடனான ஒத்துழைப்பை கைவிடுவதாக கூறியுள்ளது. இதனைத்தொடர்ந்து ரஷ்ய ராக்கெட்டுகளின் உதவியை நாடாமல், விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு செல்ல வேறு வழியை யோசித்து வருகிறோம்” ஐரோப்பிய நிறுவனம் தெரிவித்துள்ளது.