மறியலில் ஈடுபட்ட 30 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதபாளையம் அண்ணாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை வருவாய்த்துறையினர் அகற்றியுள்ளனர். இதைக் கண்டித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி மறியலில் ஈடுபட்ட புகழூர் நகராட்சி கவுன்சிலர் சுரேஷ் உள்பட 30 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.