திடீரென வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஆடுகள் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நிம்மியம்பட்டு கிராமத்தில் நெத்திலி அம்மன் கோவில் வட்டத்தில் இருக்கும் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது பற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இதில் வீடு முழுவதும் பற்றி எரிந்து சேதம் அடைந்துள்ளது. பின்னர் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் பீரோவில் வைத்திருந்த துணிகள் மற்றும் பொருட்களும் எரிந்து சாம்பலாகி உள்ளது.