Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. “கைகூப்பி வணங்கிய இன்ஸ்பெக்டர்”…. பெரும் பரபரப்பு…!!

மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்வீராணம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் போதுமான அளவு ஆசிரியரை நியமிக்க வேண்டுமெனவும், பாதுகாப்பான வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாணாவரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது‌.

அந்த தகவலின்படி இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் மாணவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மாணவர்களை கைக்கூப்பி வணங்கினார். அதன்பிறகு மாணவர்களை தயவுசெய்து போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்கு செல்லுமாறு கூறினார். இதனையடுத்து மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |