Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…! இனி ஆஸ்பத்திரியிலே இதை எடுக்கலாம்…. அரசின் சூப்பர் திட்டம்..!!!!!

பிறந்த குழந்தைக்கு மருத்துவமனையில் ஆதார் எடுக்கும் வசதி ஒடிசா மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் நம்பர்,  பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள் ஆவணங்களுக்கும் ஆதார் கார்டு முக்கியமாகும். அதிலும் குறிப்பாக வரி ஏய்ப்பை தடுக்கவும், கடன் மோசடியை குறைக்கவும் பான் கார்டுடன், ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் வந்துள்ளது. இவ்வாறு தனிநபர் சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் மிக அவசியமாக உள்ளது.

தற்போது வீட்டிற்கே வந்து ஆதார் எடுக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தபால்காரர்கள் வாயிலாக சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு அம்சமாக குழந்தை பிறந்த இடத்திலேயே ஆதார் எடுக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது மருத்துவமனையிலே குழந்தைக்கு ஆதார் எடுத்து கொள்ளலாம். இந்த வசதி முதன் முறையாக ஒடிசா மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இதில் குழந்தை பிறந்த உடனேயே உடனடியாக ஆதார் எடுக்கும் வசதி உள்ளதாகவும், இது பெற்றோருக்கு மிகவும் சௌகரியமாக இருக்கும், என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான மனோஷ் மிஸ்ரா கூறியுள்ளார். வழக்கமாக ஆதார் எடுப்பதற்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மட்டும் போதுமானதாக இருந்தது. புதிய விதியின்கீழ் பிறப்பு சான்றிதழ் வருவதற்கு முன்னரே ஆதார் எடுக்க முடிகிறது. இதனால் குழந்தையின் தாய் அல்லது தந்தையின் ஆதார் உள்ளிட்ட விவரங்கள்  தேவைப்படுகிறது. பிறந்த ஒரு நாள் முதல் ஐந்து வயது வரை குழந்தைக்கு கைரேகை பதிவு எடுக்க முடியாது. மேலும் ஐந்து வயது தாண்டிய பின்னர்  கை ரேகை அப்டேட் செய்து கொள்ளலாம்.

Categories

Tech |