Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலை திட்டம்: வேலை செய்வோருக்கு…. வெளியான செம சூப்பர் அறிவிப்பு…!!!

நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் இன்று தாக்கல் செய்துள்ளார். இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. அதிலும் முக்கியமாக ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும் இருந்தது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு 2,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இது அந்த ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பள பிரச்சினை பரவலாக இருந்து வந்ததால் அதனை சரிசெய்யும் வகையில் இந்த நிதி ஒதுக்கீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ரூபாய் 73,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

தற்போதைய தமிழகம் மட்டுமல்லாமல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு  705 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்திற்கு 636 கோடி ரூபாயும் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.26,647.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |