இன்று மற்றும் நாளை இலவச மருத்துவ சேவை முகாம் வேலுநாச்சியார் மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில் நடைபெற உள்ளது.
வேலுநாச்சியார் மகளிர் மேம்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீ ஆதிவராக நல்லூரில் மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வேலுநாச்சியார் மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில் மாபெரும் குறைந்த கட்டண மருத்துவ சேவையானது இரு நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த முகாமிற்கு இந்தியாவின் புகழ்பெற்ற இருதய நோய் நிபுணர் டாக்டர் முகுந்த் கர்மல்கர் ஜி ஹைதராபாத்தில் இருந்து வருகை தருகிறார். இதையடுத்து கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீ ஆதிவராக நல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த முகாமில் கலந்துகொள்ளும் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் இங்கு செய்யப்படும் பரிசோதனைக்கு 75 சதவீத வரை ஆகும் செலவை வேலுநாச்சியார் அறக்கட்டளை ஏற்றுக்கொள்கிறது. எனவே சொற்ப தொகையை மட்டும் பயனாளர்கள் செலுத்தி பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளது. அதன்படி,
இந்த சோதனை விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
1.ECG – ₹150
2. HB, HCT, இரத்த சர்க்கரை சோதனை -₹ 30
3. சிறுநீர் பரிசோதனை-₹20
4. மலேரியா பரிசோதனை-₹50
5. டெங்கு பரிசோதனை- ₹100
இந்த முகாமிற்கு முன்பதிவு அவசியம் எனவும் முன்பதிவிற்கு 8825621952, 8754453705 ஆகிய இந்த எண்களை அழைக்கவும் . இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள் என்று தெரிவித்துள்ளது.மேலும் நோயற்ற வலிமையான நமது கிராமங்களை உருவாக்க பாடுபடுவோம் எனவும் வருமுன் காப்பது அறிவு. இருதய நோய், சிறுநீரக கல், இரத்தத்தின் சக்கரை அளவு இவற்றை பரிசோதனை செய்வதில் தயக்கம் காட்ட வேண்டாம். இவ்வாறு வேலுநாச்சியார் மகளிர் மேம்பாட்டு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.