Categories
உலக செய்திகள்

இந்துக் கோவிலை சூறையாடிய மர்மநபர்கள்…. வங்கதேசத்தில் பரபரப்பு….!!

இந்து கோவிலுக்குள் மர்ம நபர்கள் புகுந்து சூரையடியுள்ளனர்.

வங்காள தேசத்தின் டாக்கா என்ற நகரில் ராதாகந்தா கோவில் அமைந்துள்ளது.  இந்நிலையில் நேற்று   இந்த கோவிலில் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.  அந்த சமயத்தில் கோவிலுக்குள் 2௦௦  பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென நுழைந்தது. மேலும் அவர்கள் கோவிலை சூரையாடியதோடு அங்குள்ள பக்கதர்களையும் காயப்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து கோவிலுக்குள் இருந்த சாமி நகைகள் மற்றும் கோவில் சார்பான அனைத்து பொருள்களையும்  அவர்கள் எடுத்து சென்றுள்ளனர்.  இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

மேலும் இந்த  மர்மகும்பலை வழிநடத்துப்பவர் ஹாஜி சபியுல்லா என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த தாக்குதல் குறித்து கோவில் நிர்வாகியான ராதாரமண தாஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது “ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களின் போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. இதனை போன்று பல ஆண்டுகளுக்கு டாக்காவில் உள்ள திப்பு சுல்தான் சாலை மற்றும் சிட்டகாங்கில் உள்ள கொத்வாலி போன்ற பகுதிகளிலும் இதே போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |