அஜித்துடன் அம்பானி சங்கர் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் அளவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் பல விமர்சனங்களையும் பெற்றிருக்கின்றது. இதனால் அடுத்த படத்தில் விமர்சங்கள் இல்லாமல் ஹிட் கொடுத்திட வேண்டும் என எண்ணுகிறார் அஜித்.
இதனால் அஜித் தன் எடையை 25 கிலோ வரை குறைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித்துடன் நடிகர் அம்பானி ஷங்கர் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படமானது ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.