Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக்!…. புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து?…. பட்ஜெட்டில் ஏமாற்றம்….!!!!

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பல வாக்குறுதிகளை அளித்திருந்தார். அதில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. அதன்படி 2022ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர்கள் பயனடைந்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தற்போதைய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

அதாவது தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் 2004-க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி பணி காலம் முடிவடைந்த பின் வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டு பணி காலத்தின் போது பிடித்தம் செய்யப்படும் தொகை மட்டுமே அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் பண பலன்களும் நிறுத்தம் செய்யப்பட்டது.

இதனால் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இருப்பினும் பழைய ஓய்வூதியத் திட்டம் தற்போது வரை நடைமுறைக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகாததால் அவர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

Categories

Tech |